×

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

 

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66 எம்.உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (22). இவர் குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கு இடையே அந்த கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் அருகே சிவா அணிந்திருந்த செருப்பு மற்றும் செல்போன் ஆகியவை இருப்பது தொடர்பாக குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அலங்காநல்லூர் தீயணைப்பு துறைக்கும், பாலமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் இறங்கி சோதனை செய்த போது இறந்த நிலையில் கிடந்த சிவா உடலை கைப்பற்றி பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

The post மாயமான வாலிபர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Teen Corpse Rescue ,Siva ,66 ,Usilambatti ,Palamedu, Madurai district ,
× RELATED மாயமான வாலிபர் சடலமாக மீட்பு