×

மனநலம் பாதித்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் 65 வயது முதியவர் கைது செய்யாறு அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற

செய்யாறு, நவ.27: செய்யாறு அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 65 வயது முதியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். சற்று மனநலம் பாதித்த இவர், தனது 70 வயது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு 40 வயது பெண்ணும், அவரது தாயும் நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த சோழவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி(65) என்பவரிடம் `லிப்ட்’ கேட்டனர். அதற்கு அவர் இருவரையும் பைக்கில் ஏற்றிச்செல்ல முடியாது எனக்கூறி, முதலில் மூதாட்டியை அழைத்துச்சென்று உறவினர் வீட்டில் விட்டுவிட்டார்.

பின்னர், 40 வயது பெண்ணை அழைத்து செல்வற்காக சென்றார். அப்போது மூதாட்டி, தனது வீட்டில் செல்போன், சார்ஜர் விட்டு விட்டு வந்துவிட்டதாகவும், தனது மகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று அதனை எடுத்து வரும்படியும் கூறியுள்ளார். இதனால் சுப்பிரமணி, மனநலம் பாதித்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கதறி அழுதார். இந்நிலையில், மனநலம் பாதித்த மகளுடன் வசிக்கும் மூதாட்டியின் பாதுகாப்பு கருதி, அவரது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி, வெளிநாட்டில் உள்ள மூதாட்டியின் மற்றொரு மகள் கண்காணித்து வருகிறார். தனது தங்கையை சுப்பிரமணி பலாத்காரம் செய்ததை கேமராவில் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஊரில் உள்ள தனது உறவினர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் வழக்கு பதிந்து, சுப்பிரமணியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மனநலம் பாதித்த பெண்ணை முதியவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post மனநலம் பாதித்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் 65 வயது முதியவர் கைது செய்யாறு அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Vandavasi taluk, Thiruvannamalai district ,Keiyaru ,
× RELATED செய்யாறு வட்டாரத்தில் பெஞ்சல் புயல்...