×

மீண்டும் வாக்குச்சீட்டு முறையே தேவை: கார்கே

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவையில்லை; மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜனை கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை . மின்னணு வாக்கு எந்திரங்கள் தேவை என்றால் பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்து விடும். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

The post மீண்டும் வாக்குச்சீட்டு முறையே தேவை: கார்கே appeared first on Dinakaran.

Tags : Carke ,Delhi ,Congress ,Mallikarjan Garke ,AKKSHIT ,PRESIDENT ,MALLIKARJUNA KHARKE ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ்...