×
Saravana Stores

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதில் போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது, போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் சமுக பொருளாதார பின்னனி,போதைப் பொருள் அதிகம் புழங்கும் இடம், இதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் படி போதை தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக...