×
Saravana Stores

பழமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பழைமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற வந்த வருவாய்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் கட்டிடம் கட்டி ஆக்கிரமித்து வருகின்றார். இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பேத்கர் பகுதியில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நியாய விலை கடை இல்லாததால் பக்கத்து கிராமத்திற்க்கு சென்று நியாய விலை கடையில் இருந்து அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வாங்கி வரும் நிலை இருந்து வருகிறது. எனவே, இங்குள்ள பழைமை வாய்ந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக நியாய விலை கடை கட்ட வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் இந்த பழைமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டிந்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து வருவாய்துறை, காவல்துறையினர் பாதுகாப்புடன் நேற்று பழைமை வாய்ந்த கட்டிடத்தை பொக்லைன் இயந்திரன் உதவியுடன் அகற்ற வந்தனர். ஆனால் திம்மாவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பழைமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, வருவாய்துறையினர் கட்டிடத்தை அகற்றாமல் திரும்பி சென்றனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பழைமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற வந்த வருவாய்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிய சம்பவம் திம்மாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பழமை வாய்ந்த கட்டிடத்தை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Revenue Department ,Thimmavaram Ambedkar Nagar ,
× RELATED கொடுமுடியில் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்