×
Saravana Stores

கனமழை எச்சரிக்கை எதிரொலி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறப்பு

 

தஞ்சாவூர், நவ. 26: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கனமழை எச்சரிக்கையையொட்டி 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மிக கனமழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலர்ட் ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகள், கோரிக்கைகளை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண் 04362-230121 மற்றும் வாட்ஸ்அப் எண்-93450 88997 ஆகிய எண்களை பயன்படுத்தித் தெரிவித்திடலாம். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Collector ,Northeast ,Monsoon ,India Meteorological Center ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரி...