- ஜெயங்கொண்டம் தொழிற்சங்கம்
- ஜெயங்கொண்டம்
- அரியலூர் மாவட்டம்
- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்
- கல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- சலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- ஜெயங்கொண்டம் யூனியன்
ஜெயங்கொண்டம், நவ.26: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ், கல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை, சலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை , அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை, இறவாங்குடி அரசினர் உயர்நிலைப் பள்ளியில்,ரூ.3 லட்சம் மதிப்பீட்டில், பெஞ்ச் டெஸ்க் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி, மதலைராஜ், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனசேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், தலைமை ஆசிரியர்கள் தேன்மொழி (கல்லாத்தூர்), நதியா (சலுப்பை), ரவிச்சந்திரன் (அய்யப்பநாயக்கன்பேட்டை), முருகன்(பொ)(இறவாங்குடி), ஊராட்சிமன்ற தலைவர்கள் குழந்தைதெரசா ஞானசேகரன் (சலுப்பை),அறிவழகழன் (அய்யப்பன்நாயக்கன்பேட்டை), வளர்மதி பாலமுருகன் (இறவாங்குடி), திமுகபொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி தலைவர் கண்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
The post ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் ஸ்மார்ட் வகுப்பறைகள் appeared first on Dinakaran.