×
Saravana Stores

அரியலூர் கலெக்டர் அலுவவலக வளாகத்தில் ராணுவ வீரர் தர்னாவால் பரபரப்பு

 

அரியலூர், நவ. 26: அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் அருகே தனது குடும்பத்தினரை தாக்கிய போலீசார் மீதும் நடவடிக்கைக்க எடுக்கக் கோரி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபுரந்தான், படுகளத் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் ரஞ்சித்குமார்; ராணுவ வீரர். இவர், கடந்த திங்கள்கிழமை கலெக்டர் ரத்தினசாமியை சந்தித்து, நிலப் பிரச்னை தொடர்பாக, எனது தந்தை, தங்கை, தம்பி ஆகிய மூவரையும், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் சரண்ராஜ் மற்றும் அவரது சகோதரர் சத்தியமூர்த்தி ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர், விக்கிரமங்கலம் காவல் நிலையம் ஆகியவற்றில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென்றும், ஆகவே தாங்களாவது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். ஆனால், மனு அளித்து ஒருவாரமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமார் திங்கள்கிழமை அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்த காவல் துறையினர், அவரை எழுந்திருக்கச் சொல்லி சமதானம் செய்ய முயன்றனர். அதற்கு அவர் உடன்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறையினர் ரஞ்சித்குமாரை வலுக்கட்டயமாக தூக்கிச் சென்று, அங்குள்ள அறையில் தங்க வைத்து, பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

The post அரியலூர் கலெக்டர் அலுவவலக வளாகத்தில் ராணுவ வீரர் தர்னாவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,collector ,Sripuranthan ,Ariyalur district ,
× RELATED அரியலூர் கலெக்டர் பார்வையிட்டார்...