×

பாஜவுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசலில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பாஜக அரசே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

இந்து முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே பிளவையும் பாகுபாட்டையும் உருவாக்கப் பாஜ அதிகாரத்தைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறது. அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க மத அடிப்படைவாத சிந்தனையாளர்களுக்கு எதிராக எதிர் வினையாற்ற வேண்டும்.

The post பாஜவுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Bajau ,Chennai ,Humanity People's Party State ,President ,M.H. ,Shahi Jama Masjid ,Sambal ,Uttar Pradesh ,BJP ,Dinakaran ,
× RELATED ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு மீனவர் பிரச்னையை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு