×

சூளகிரியில் ஊராட்சி வளங்கள் குறித்த வரைபடம்

சூளகிரி, நவ.26: சூளகிரி ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான சமூக வரைபடம், வள வரைபடம், வெண் வரைபடம் போடப்பட்டது. இதில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட குழு உறுப்பினர்கள், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ், சமூக நலத்துறை ஜெயம்மா, குழந்தைகள் நலத்துறை கிராம செவிலியர், திட்ட குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோம்ஸ், வட்டார வளமைய அலுவலர் ஆயிஷா ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post சூளகிரியில் ஊராட்சி வளங்கள் குறித்த வரைபடம் appeared first on Dinakaran.

Tags : Chulagiri ,Village Panchayat Development Project Committee ,Choolagiri Panchayat Council ,Kalaichelvi ,Choolagiri ,Dinakaran ,
× RELATED சுவர் இடிந்து விழுந்து கன்றுக்குட்டி பலி