×

முரசொலி மாறன் புகழ் என்றென்றும் போற்றுதலுக்குரியது: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் புகழ் என்றென்றும் போற்றுதலுக்குரியது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். நம் எல்லோரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முரசொலி மாறன் நினைவு நாள் இன்று. கலைஞருக்கும், திமுகவுக்கும் உற்ற துணையாக இருந்து அதன்மூலம் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைத்தவர் முரசொலி மாறன். கலைஞரின் மனசாட்சி, மாநில சுயாட்சியை வலியுறுத்திய ஜனநாயக போர்க்குரல் முரசொலி மாறன். டெல்லி அரசியல் அரங்கில் திமுகவுக்கான கம்பீர இடத்தை உறுதி செய்தவர் முரசொலி மாறன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

 

The post முரசொலி மாறன் புகழ் என்றென்றும் போற்றுதலுக்குரியது: துணை முதல்வர் உதயநிதி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Murasoli Maran ,Deputy Chief ,Udayanidhi ,Chennai ,Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Union Minister ,Udayanidhi Prashalam ,
× RELATED 153 ஏழை குழந்தைகளின் இலவச அறுவை...