×
Saravana Stores

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவ.26-ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southeastern Bengal region ,Chennai Meteorological Survey Centre ,Chennai ,southern Andaman ,Centre for Meteorological Studies ,Southeast Bangladeshi region ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33...