×
Saravana Stores

‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தில் 978 காவலர்களின் மனுக்களுக்கு தீர்வு: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை: ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை உள்ள 978 காவலர்களின் குறைதீர்ப்பு மனுக்கள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஒவ்வொரு காவல் மண்டலம் வாரியாகவும், ஆயுதப்படை மற்றும் மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை உள்ள காவலர்கள் குறை தீர்முகாம் நடத்தி, குடியிருப்பு கோருதல், பணிமாறுதல் கோருதல், ஊதியம் நிர்ணயம் செய்தல், ஊதிய நிலுவைத் தொகை, தண்டனை ரத்து செய்தல், பதவி உயர்வு உள்ளிட்ட மனுக்களுடன் வந்தவர்களை குறைதீர் முகாமில் ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்து 1,976 மனுக்களை பெற்று, அவற்றினை பரிசீலனை செய்து, 978 மனுக்களின் மீது உடனடியாக தகுந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. 998 மனுக்களின் மீது தீர்வு காண தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டலம்/பிரிவு தேதி பெறப்பட்ட
மனுக்கள் தீர்வு
காணப்பட்ட
மனுக்கள் பரிசீலனையில் உள்ள மனுக்கள்
தெற்கு 13.8.24 268 231 37
வடக்கு 5.9.24 280 254 26
மேற்கு 25.10.24 214 189 25
கிழக்கு 5.11.24 300 273 27
போக்குவரத்து 12.11.24 175 31 144
ஆயுதப்படை, மோட்டார்
வாகனப்பிரிவு 19.11.24 628 – 628
சிறப்பு பிரிவுகள் 19.11.24 65 – 65
மத்திய
குற்றப்பிரிவு 20.11.24 46 – 46
மொத்தம் 1976 978 998

* பொதுமக்களின் 282 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற (8.7.2024) நாள் முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று வருகிறார். அந்த மனுக்களின்மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவிற்கு வான்தந்தி மற்றும் செல்போன் மூலமாக அறிவுரை கொடுக்கிறார் கடந்த ஜூலை 8ம் தேதி முதல் கடந்த 20ம் தேதி வரை 391 மனுக்கள் பெறப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, அவற்றில் இதுவரை 282 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

The post ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தில் 978 காவலர்களின் மனுக்களுக்கு தீர்வு: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Arun Nidda ,Arun ,Tamil Nadu ,Chief Minister ,Chennai Police Commissioner ,Dinakaran ,
× RELATED குறை தீர்க்கும் முகாமில் மக்களிடம்...