×
Saravana Stores

பஸ்சில் வயதான பெண்களிடம் நகை பறிப்பு மாமியார், 2 மனைவிகளுடன் கைவரிசை காட்டிய ஆசாமி கைது

*புளியங்குடி தனிப்படை அதிரடி

புளியங்குடி : புளியங்குடியில் பஸ் பயணிகளிடம் நகை திருடியவர், அவரது 2 மனைவிகள், மாமியாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பஸ்சில் பயணிக்கும் வயதான பெண்களை குறிவைத்து நகை, பணத்தை ஒரு கும்பல் திருடி வந்தது.

கடந்த வாரம் புளியங்குடியை சேர்ந்த மாரியம்மாள்(60) என்பவர் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பஸ்சில் சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் வைத்திருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர். இதுபோல் சாய்ராபீவி(60) என்பவர் புளியங்குடியில் இருந்து கடையநல்லூருக்கு பஸ்சில் சென்றபோது அவர் அணிந்திருந்த 4.5 பவுன் நகை மாயமானது.

இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில் எஸ்.ஐ. மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
பஸ் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பஸ்சில் ஏறும் வயதான பெண்களை குறிவைத்து தம்பதி உள்ளிட்ட 3 பேர் கும்பல், நகை திருடியது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை நடத்தி நகை திருட்டில் ஈடுபட்ட ஆலங்குளம் அருகே மாறாந்தையைச் சேர்ந்த இசக்கி மகன் நாகப்பன்(45), அவரது மனைவிகள் முத்தம்மாள்(41), பேச்சியம்மாள்(40), மாமியார் கூச்சம்மாள் ஆகிய 4 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post பஸ்சில் வயதான பெண்களிடம் நகை பறிப்பு மாமியார், 2 மனைவிகளுடன் கைவரிசை காட்டிய ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Asami ,PULIYANGUDI ,INDEPENDENT POLICE ,Puliangudi, Tenkasi district ,Assami ,
× RELATED ஆசைக்கு இணங்க மறுத்த மனநிலை பாதித்த...