×

புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உண்டியலில் ₹2.40 லட்சம் காணிக்கை

கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் அமைந்துள்ள பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு விழாக்கள் மற்றும் வழிபாடுகள் நடந்துள்ளதால், நேற்று இந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தது.

ஆய்வாளர்கள் ராமமூர்த்தி மற்றும் சத்தியா ஆகியோர் தலைமையில், செயல் அலுவலர் சித்ரா மேற்பார்வையில் கோயிலில் இருந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகளை பக்தர்கள் மற்றும் தன்னார்வலகள் எண்ணினர். இதில் ₹2 லட்சத்து 40 ஆயிரத்து 691ம், 17 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் வீடியோ பதிவுடன் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

The post புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உண்டியலில் ₹2.40 லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Puduppet ,Krishnagiri ,Prasanna Parvati Sametha Chandramouleswarar Temple ,Rasuveedi, Puduppet, Krishnagiri ,Hindu Religious Endowment Department ,Chandramauleeswarar ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...