- ஷவரன் அபிஸ்
- கும்பா பிஷேகா
- பெரணமல்லூர்
- Avaniyapuram
- திருவண்ணாமலை மாவட்டம்
- ஆவணீஸ்வரர் கோயில் கும்பபிசேகம்
- சவரன்
- அபே
- கோவில் கும்பாபிஷேகம்
பெரணமல்லூர், நவ.21: பெரணமல்லூர் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் நேற்று காலை அவணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் ஆவணியாபுரம் பகுதியை சேர்ந்த அலமேலு(65) என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர் விழாவிற்கு 4 சவரன் தங்க செயின் அணிந்து வந்திருந்தாராம்.
கும்பாபிஷேக விழாவில் சுவாமியை வழிபட்டு திரும்பியபோது கழுத்தில் இருந்த இரட்டை பட்டை செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரணமல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். கூட்டத்தில் விசாரித்துபோது செயின் திருட்டு போனது தெரிய வந்தது. இதையடுத்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கோயில் கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் 4 சவரன் அபேஸ்: பெரணமல்லூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.