×
Saravana Stores

கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை மீது வன உயிரின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே வாரத்தில் 2 யானைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பள்ளங்கி, பாச்சலூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 12ம் தேதி வெண்கல வயல் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு யானையும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அடர் வனங்களில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேடி வரும் காட்டு யானைகள் மலை கிராமங்களில் விவசாய விளை பொருட்களுக்கு பயன்படுத்தும் யூரியா, பூச்சிக்கொல்லி உள்ளிட்டவைகளை தெரியாமல் உட்கொண்டு உயிரிழக்கின்றன.

எனவே யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானையின் வழித்தடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டாள் மட்டுமே யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க முடியும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை மீது வன உயிரின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Kodiakanal ,Godaikanal ,Petapara ,Anjuweet ,Valangi ,Bachalur ,Bronze Field ,
× RELATED கடுங்குளிர், சாரல் வெறிச்சோடியது கொடைக்கானல்