×
Saravana Stores

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருகை: கிரெம்ளின் மாளிகை தகவல்

புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி மூன்றாண்டுகளாகி விட்டன. இந்த போரை அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற மோடி இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். தொடர்ந்து 2ம் முறையாக கடந்த மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி ரஷ்யா சென்றிருந்தார்.

இந்த பயணங்களின்போது இந்தியா வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் புடின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்வோக், “இந்தியா – ரஷ்யா இடையே வலுவான இருதரப்பு உறவு உள்ளது. விரைவில் அதிபர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது இந்திய பயணம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

 

The post ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருகை: கிரெம்ளின் மாளிகை தகவல் appeared first on Dinakaran.

Tags : President Putin ,India ,Kremlin ,New Delhi ,Ukraine ,Russia ,Modi ,Dinakaran ,
× RELATED வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற...