×
Saravana Stores

நீடாமங்கலத்தில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

நீடாமங்கலம், நவ. 19: நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரம் மட்டும் மழைபெய்து பகல் நேரத்தில் மழை விட்டு விட்டு பெய்கிறது. பகலில் மக்கள் அன்றாடம் வேலைகளை செய்து முடித்து வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த, ஐந்து நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் கூலி வேலைக்கு செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

குளிர்ந்த காற்று வீசுவதால் சாரல் தாங்கமுடியாமல் நீடாமங்கலத்தில் சில கடைகளில் வியாபாரம் இல்லாததால் கடைகள் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் பாதிப்படைந்துள்ளது. ந்த மழையால் கிராமப்புற சாலைகள் மிகவும் பழுதடைந்து சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கோயில் வெண்ணி, பழைய நீடாமங்கலம், பரப்னாமேடு, ஒரத்தூர், வடுவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு பசு மாடு இறந்துள்ளது.

The post நீடாமங்கலத்தில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Delta district ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலத்தில் தொடர்மழை புதுபாலம் பாமனியாறில் மழைநீர் சீரிப்பாய்கிறது