×
Saravana Stores

கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும்: இணைப்பதிவாளர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர்கள் மற்றும் 34 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

இத்தேர்விற்கான தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை திருவள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் (கலெக்டர் அலுவலகம் பின்புறம்) நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நேரம், நாள் ஆகியவை குறிப்பிட்டு நேர்முக தேர்வு அனுமதிச் சீட்டு திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளமான https://www.drbtvl.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அனுமதிச் சீட்டினை மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கைப்பேசி எண் 9445394673-க்கு தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும்: இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,District ,Co ,Societies ,Joint Director ,Sanmugavalli ,Tiruvallur district ,
× RELATED ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு...