×
Saravana Stores

எத்தனை பிஎம்எல்ஏ வழக்குகள் முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது? : அமலாக்கத்துறை கண்டித்த உச்சநீதிமன்றம்!!

டெல்லி : அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்குகளில் எத்தனை முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டன என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கைது செய்யப்பட்டாய் ஓர் ஆண்டு 9 மாதங்கள் அவர் சிறையில் இருக்கிறார். இன்று வரை விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணையை விரைவில் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் அமலாக்கத்துறையை கண்டித்தனர். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை புகார்களில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிவடைந்துள்ளன, எத்தனை வழக்குகள் தண்டனைக்கு வழிவகுத்துள்ளது என்பதை ஒருநாள் கண்டறிய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

The post எத்தனை பிஎம்எல்ஏ வழக்குகள் முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது? : அமலாக்கத்துறை கண்டித்த உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Enforcement Department ,Delhi ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை பதிவு செய்த பிஎம்எல்ஏ...