- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- 16 வது நிதி ஆணையக் குழு
- 16வது நிதி ஆணையம்
- அரவிந்த் பனகரியா
- நிதிக் குழு
- முதலமைச்சர் எல்எலா கே.
சென்னை : சென்னையில் 16-வது நிதி ஆணையக் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தது. இந்த நிலையில், சென்னையில் நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் ஆலோசனை இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பல முக்கியமான திட்டங்களை தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம்தான் உள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில வரி வருவாய் பங்கை 41 விழுக்காடாக உயர்த்தியது மகிழ்ச்சி. அறிவிப்புக்கு மாறாக 33.16 விழுக்காடு மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது ஒன்றிய அரசு. வரி பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது. தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பதுபோல் உள்ளது. ஒன்றிய வருவாய்வில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50%-ஆக அதிகரிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதத்தை நிதி ஆணையக்குழு உறுதி செய்திடும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்பு வசதிகள் பெருமளவு சேதமடைகின்றன.
பேரிடர் துயர் துடைப்பு பணிக்காக உரிய நிதியை வழங்க நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும். சமூக நலத்திட்டங்களுக்கு தேவயைான நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும். நாட்டிலேயே அதிகமாக வயதானவர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிதிக்குழு தீர்வு காணும் என்று நம்புகிறன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.16-வது நிதிக்குழு பரிந்துரைகள் அனைத்து மாநில தேவை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.நிதிக்குழு பரிந்துரைகள் இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் என நம்புகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பது போல் உள்ளது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.