×
Saravana Stores

தென் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி

திண்டுக்கல், நவ. 18: திண்டுக்கல் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் தென் மாநில அளவிலான கராத்தே போட்டி மற்றும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 7 வயது முதல் 22 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கட்டா, குமித்தோ என இரண்டு பிரிவில் கீழ் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம் மற்றும் தனித்துவம் சிலம்பம் என மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post தென் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி appeared first on Dinakaran.

Tags : South State Level Karate, Silambam Competition ,Dindigul ,Dindigul District Karate Association ,South State level karate ,Tamil Nadu ,Pondicherry ,Kerala ,Karnataka ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே நான்கு...