×
Saravana Stores

2-வது முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து தாக்குதல்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகுயின் வீட்டிற்கு வெளியே திடீரென தீப்பற்றி எரித்தது. இது குண்டுவெடிப்பு தாக்குதலா? என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரதமர இல்லத்திற்கு வெளியே 2 முறை திடீரென தீப்பிடித்து சரிந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது. நெதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர வீட்டில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்று இருந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் முன்னே உள்ள கார்டன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது வெடிகுண்டு தாக்குதல் என கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக்கூறியுள்ள இஸ்ரேல், காசா மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைபினரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ந்டத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உரிய விகிதத்தில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் மேகம் சூழந்துள்ளது. இத்தகைய பரபரப்புக்கு இடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தில் மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலில் உள்ள சிசேரியா நகரத்தில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே ஃப்ளேர்ஸ் எனப்படும் தீப்பிழம்புகள் கிளம்பும் Flash Bomb விழுந்து தீ பற்றி எரிகின்றன. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ அவரது குடும்பத்தினரோ. வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் முன்பாக நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு,இஸ்ரேல் அதிபர் இஸாக் ஹெர்ஸோக் கண்டனம் தெரிவித்துள்ளர்.

The post 2-வது முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Benjamin Netanyahu ,Jerusalem ,Homeland Security Organization ,Dinakaran ,
× RELATED லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து...