×

விதிமீறி இயக்கப்பட்ட 3 பள்ளி பஸ்கள் பறிமுதல்

 

பள்ளிபாளையம், நவ.17: குமாரபாளையத்தில் நடத்திய வாகன சோதனையில் விதி மீறி இயக்கப்பட்ட 3 பள்ளி பஸ்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. குமாரபாளையம்- இடைப்படி சாலையில், வட்டார போக்குவரத்து அதிகாரி பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 9 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிற மாவட்டங்களுக்கு செல்லும் பள்ளி -கல்லூரி வாகனங்களுக்கு அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டுமென்ற விதிமுறைகளை பின்பற்றாமல் ஈரோடு மாவட்டத்திலிருந்து நாமக்கல் கடந்து சேலம் மாவட்டம் சென்று வந்த மூன்று பள்ளி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிடிபட்ட வாகனங்களுக்கு ரூ.67,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

The post விதிமீறி இயக்கப்பட்ட 3 பள்ளி பஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kumarapalayam ,Regional Transport Officer ,Boonguzali ,Motor Vehicle Inspector ,Sivakumar ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்