×
Saravana Stores

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: போலீஸ்காரர் கைது

விழுப்புரம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை போலீஸ்காரரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் சம்பத். இவர் வழுதரெட்டியைச் சேர்ந்த பாண்டியன்(42) என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார். பாண்டியன் கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு தெரிவித்திருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் பிஇ முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத், பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பாண்டியன் ஏமாற்றியுள்ளார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

The post அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Cuddalore ,Sampath ,Thiruvenneynallur ,Pandian ,Saludareti ,Cuddalore Armed Forces ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர்,...