×

குஜராத்தில் நேற்று 8 பேர் கைதான நிலையில் டெல்லியில் ரூ900 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 குற்றவாளிகள் கைது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாங்லோய் மற்றும் ஜனக்புரி பகுதிகளில் இருந்து 82 கிலோவுக்கு மேற்பட்ட கோகைன் போதைப்பொருளை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மீட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பவிருந்த சுமார் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள 82.53 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவை டெல்லியில் கூரியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி மற்றும் சோனிபட்டில் வசிக்கும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு போதை ெபாருள் நெட்வொர்க்குகளுடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபர் 2ம் தேதி, தெற்கு டெல்லியின் மஹிபல்பூரில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 5,620 கோடி ரூபாய். இந்த வழக்கில் தொடர்புடைய ெடல்லி காங்கிரஸின் நிர்வாகி துஷார் கோயல் கைது செய்யப்பட்டார். அதன்பின்னணியில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

முன்னதாக நேற்று இந்திய கடற்படை, குஜராத் ஏடிஎஸ் மற்றும் தேசிய போதை ெபாருள் தடுப்பு ஆகியன இணைந்து குஜராத் கடற்கரையில் 700 கிலோ மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தன. இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள 82.53 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

The post குஜராத்தில் நேற்று 8 பேர் கைதான நிலையில் டெல்லியில் ரூ900 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Gujarat ,New Delhi ,National Narcotics Prevention Unit ,Nangloi ,Janakpuri ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...