×

போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நபர் மீது மேலும் ஒரு சிறுமி புகார் போலீஸ் வழக்குப்பதிவு கீழ்பென்னாத்தூர் அருகே

திருவண்ணாமலை, நவ.16: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற பாபு(42), டிராக்டர் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், தனது தாயிடம் டியூஷன் படிக்க வந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தாயிடம் டியூஷனுக்கு வந்து 14 வயதுடைய மற்றொரு சிறுமியிடமும் கார்த்திகேயன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமிக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பாக திருவண்ணாமலை மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

The post போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நபர் மீது மேலும் ஒரு சிறுமி புகார் போலீஸ் வழக்குப்பதிவு கீழ்பென்னாத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : POCSO ,Kilpennathur ,Thiruvannamalai ,Karthikeyan ,Babu ,Vettavala ,Kilipennathur taluka ,Tiruvannamalai district ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...