×
Saravana Stores

வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணியில் ஈடுபடுத்தக் கூடாது: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர்களை டிஜிட்டல் முறைப்படுத்தும் அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் செய்ய வேண்டிய வேலையை எந்தவித பாதுகாப்புமின்றி அலட்சிய போக்கோடு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 மாணவிகள் பாம்பு மற்றும் விஷப்பூச்சியால் தீண்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த 13ம் தேதியும் மாணவர்கள் டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதனை தேமுதிக கண்டிப்பதோடு, அம்மாணவர்களை அரசு பணிக்கு ஈடுபடுத்தாமல் அவர்களை கல்வி கற்க அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணியில் ஈடுபடுத்தக் கூடாது: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,CHENNAI ,DMUDIGA ,General Secretary ,Tamil Nadu government ,
× RELATED பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி...