×
Saravana Stores

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பந்தல் கால் நடப்பட்டது

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஜன.10ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்ெவாரு ஆண்டும் கோலாலகமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு விழா திருநெடுந்தாண்டகத்துடன் வரும் டிசம்பர் 30ம் தேதி துவங்குகிறது.

இந்த விழா ஜனவரி 20ம் தேதி வரை நடக்கிறது. டிசம்பர் 31ம் தேதி பகல் பத்து உற்வசம் துவங்குகிறது. ஜனவரி 9ம் தேதி மோகினி அலங்காரம், 10ம் தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி திருக்கைத்தல சேவை, 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 19ம் தேதி தீர்த்தவாரி, 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது. இந்த நிலையில் ரங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10.45 மணிமுதல் 11.45 மணிக்குள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது. அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். அதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பந்தல் கால் நடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadashi ceremony ,Pandal Kal ,Srirangam Ranganathar Temple ,Tiruchi ,Pandalkal ,Vaikunda Ekadashi Festival ,Puloka Vaikundam ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...