ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டையில் அகழாய்வுக்காக புதிய குழிகள் தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் தங்க அணிகலன்கள், தங்க குண்டுமணி, சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட 14வது குழியில் விரலால் சுண்டி விளையாடும் சுடுமண் விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வுக்காக புதிதாக இரண்டு குழிகள் தோண்டும் பணி நேற்று துவங்கியது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘‘நமது முன்னோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது விரலால் சுண்டி விளையாடப்படும் பொருள் கிடைத்துள்ளது. இரும்பு காலத்திற்கு சான்றாக ஆணியும் கிடைத்துள்ளது. மேலும் தொழில்கள் நடந்ததற்கு சான்றாக அலங்காரத்துடன்கூடிய சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post வெம்பக்கோட்டையில் அகழாய்வுக்காக புதிய குழிகள் தோண்டும் பணி மீண்டும் துவக்கம் appeared first on Dinakaran.