- பழனி மாரியம்மன் கோயில்
- பழனி
- பழனி டவுன் கிழக்கு ரதவீதி
- அகுன்னாச்சியம்மன்
- கோவில்
- ஆண்டு அபிஷேகம்
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- வாராபிஷேகம்
பழநி, நவ. 14: பழநி டவுன் கிழக்கு ரதவீதியில் அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கொண்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
தொடர்ந்து கலசங்களில் உள்ள நீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அழகுநாச்சியம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இப்பூஜைகளை மேற்கொண்டனர். இதில் கோயில் அதிகாரிகள், நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post பழநி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக சிறப்பு யாகம் appeared first on Dinakaran.