- இந்தியா கூட்டணி
- மோடி
- செல்வம் அறிக்கை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வமாக
- உத்திரப்பிரதேசம்
- இந்தியா
- தின மலர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:
பாஜ ஆட்சி செய்கிற உத்தரபிரதேச மாநிலத்தில்தான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்து பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் 51,656. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 12,287 வழக்குகள் உள்ளன. அதேபோன்று, பாஜ ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 7732 வழக்குகள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 2022ம் ஆண்டு கணக்கின்படி 32.4 சதவிகிதத்தினர் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தலித்துகளுக்கு எதிரான குற்றவாளிகளை பாஜ ஆட்சியில் தண்டனை வழங்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இந்த அநீதியை எதிர்த்துதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று ராகுல்காந்தி போராடி வருகிறார். இதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, அவதூறு குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் அவதூறு பிரசாரத்திற்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரண்டு வருவது கண்கூடாக தெரிகிறது.
The post மோடியின் அவதூறு பிரசாரத்துக்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் திரண்டு வருகின்றனர்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.