×
Saravana Stores

மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேச்சு ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 2 ஆண்டு சிறை: சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர், வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, என பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு இதுதொடர்பான புகார்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அப்பள்ளியில் படித்த 8 மாணவிகள் நேரடியாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை அசோக் நகர் போலீசார் ராஜகோபாலனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது குண்டர் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில், ராஜகோபாலன் மீதான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஒவ்வொரு மாணவியின் புகாருக்கும் தலா 2 ஆண்டு வீதம் மொத்தம் 16 ஆண்டு ராஜகோபாலனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ராஜகோபாலன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவியின் புகாருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேச்சு ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 2 ஆண்டு சிறை: சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajakopalan ,Chennai Boxo ,Chennai ,K. K. Rajakopalan ,Chennai Boxo Court ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை