- உத்தரமேரூர் மாவட்ட ஆட்சியர்
- உத்தரா
- மேரூர்
- உத்தரமேரூர் மாவட்ட ஆட்சியர்
- உத்தரமேரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- உத்தரமேரூர் பஜார் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம்
- மாவட்ட கலெக்டர்
- தின மலர்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பஜார் வீதியில், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறான வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான பொது மக்களுக்கான கழிவறை வசதிகள், குடிநீர் வசதி என ஏதும் செய்யப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களுக்கு அமர இருக்கைகள் கூட இல்லாமல் உள்ளது. இதனால், பொது மக்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தரப்பில் வட்டாட்சியர் அலுவலகம் முதல் மாடியில் செயல்படுவதால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமமடைந்து மனுக்களை கொடுக்க வேண்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மாடியில் சென்று தங்களது கோரிக்கைகளை அளிக்க ஏதுவான வசதி கூட இது நாள் வரை செய்து தராமல் உள்ளது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என பலதரப்பு மக்கள் கழிப்பிட வசதியின்றி பெரிதும் தவிர்த்து வருகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் காட்சி பொருளாக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது.
இது அரசு நிகழ்ச்சியின்போது மட்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளான பொதுமக்களுக்கான கழிவறை வசதி, குடிநீர் வசதி இருக்கைகள் வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.