×
Saravana Stores

ரோகித்சர்மா, கோஹ்லியின் பார்ம் பற்றி கவலையில்லை: ஆஸ்திரேலியா புறப்படும் முன் காம்பீர் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணியின் ஒரு குழுவினர் நேற்று புறப்பட்ட நிலையில் இன்று 2வது குழுவினர் மும்பையில் இருந்து சிட்னி புறப்பட்டனர். முன்னதாக பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நிருபர்களிடம் கூறியதாவது: ரோகித்சர்மா, விராட் கோஹ்லி பார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் ரன் பசியுடன் இருப்பதை உணர்கிறேன். கடினமான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் எங்களிடம் உள்ளனர். ஆஸி. தொடர் இளம் வீரர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

நான் இந்த பணிக்கு வந்தபோது மதிப்புமிக்கதாகவும் அதே நேரத்தில் கடினமானதாகவும் இருக்கும் என தெரியும். ஆனால் நான் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. நிதிஷ்குமார் சிறந்த வீரர். எதிர்காலத்தில் முக்கிய வீரராக திகழ்வார். நாங்கள் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை பார்க்கவில்லை. பார்டர்-கவாஸ்கர் தொடரில் முழுமையாக கவனம் செலுத்தி அதில் வெற்றிபெறுவதிலேயே உள்ளது. ரோகித்சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடுவது பற்றி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அவர் ஆடவில்லை என்றால் பும்ரா வழிநடத்துவார். ரோகித் இல்லாவிட்டாலும் அபிமன்யூ ஈஸ்வரன், கே.எல்.ராகுல் உள்ளனர். ராகுலை முதல் 6 இடத்தில் எந்த வரிசையிலும் களம் இறங்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரோகித்சர்மா, கோஹ்லியின் பார்ம் பற்றி கவலையில்லை: ஆஸ்திரேலியா புறப்படும் முன் காம்பீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Kohli ,Gambhir ,Australia ,Mumbai ,cricket ,Border ,-Gavaskar ,Sydney ,Dinakaran ,
× RELATED துளித்துளியாய்….