×

சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது

சென்னை: சென்னை பாரிமுனையில் பல் மருத்துவமனை ஆண்கள் விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்றவர் காயம் அடைந்தார்.

சென்னை பாரிமுனை டிஎன்பிஎஸ்சி காலனியில் பகுதியில் அமைந்திருக்கும் சென்னை மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி இடிந்தது. இந்த கட்டிடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு நீதிமன்ற வளாகம் கட்டடம் கட்டுமான பணி மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வரமாக இந்த கட்டிடத்தை இடிக்கும் பனி நடைபெற்று வருகிறது. இன்று காலை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் பேருந்து நிலையத்திற்குள் சென்ற 3 பேர் மீது அந்த கற்கள் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் சேகர்பாபு பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள போது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனே அந்த இடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

The post சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Barimuna, Chennai ,CHENNAI ,Dental Hospital ,Chennai Barimuna ,TNPSC Colony ,Chennai Parimuna ,
× RELATED இராஜாஜியின் 146-வது பிறந்த நாளன்று...