×
Saravana Stores

கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 78 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த 11 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர்கள் அனவைரும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவர்கள் செவிலியர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 67 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 26 ஆண்களும், 41 பெண்கள் அடங்குவர்.

 

The post கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Cuddalore ,Cuddalore Government Hospital ,Tamil Nadu ,
× RELATED கடலூர் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம்...