×
Saravana Stores

லாரி மோதிஐடிஐ மாணவர் பலி

தூத்துக்குடி,நவ 10: தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் மகேந்திரன் (21). தூத்துக்குடியில் உள்ள ஒரு ஐடிஐயில் படித்துவந்த இவர் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் உள்ள பேரிகார்டை கடக்க முயன்ற போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி மகேந்திரன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து வந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார், மகேந்திரனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மோதிஐடிஐ மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Larry Mothi ,Thoothukudi ,Mahendran ,Shaktivel ,Nadukurichi ,Buthiamputur ,Tuthukudi ,Tuticorin ,IDI ,Etayapuram Road ,Larry Mothidi ,
× RELATED தூத்துக்குடி சங்கரப்பேரியில்...