×

ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் – ஸ்ரீசைலம் அணை வரை இன்று முதல் நீர்வழி விமான சேவை

திருமலை: ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். ஆந்திர மாநில அரசு முதல் முறையாக விஜயவாடாவில் கிருஷ்ணா நதி மத்தியில் அமைந்துள்ள பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை சோதனை முறையில் தொடங்கப்பட உள்ளது. இதனை இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

தொடர்ந்து, விஜயவாடா பிரகாசம் அணையில் இருந்து இருவரும் நீர்வழி விமானத்தில் ஏறி ஸ்ரீசைலம் செல்ல உள்ளனர். மீண்டும் அதே விமானத்தில் விஜயவாடா வர உள்ளனர். ஒரே விமானத்தில் நீரிலும், ஆகாயத்திலும் பறக்கும் புது அனுபவத்தை வழங்கும் விதமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த விமான சேவையை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. இதற்காக நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி விஜயவாடா கிருஷ்ணா நதி கரையில் இருந்து நேற்று அதிகாரிகளால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பயணம் செய்யும் இந்த நீர்வழி விமான சேவையில் ஸ்ரீசைலம் செல்வதை 1000 பார்வையாளர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஜயவாடா நகர காவல் ஆணையர் ராஜசேகர பாபு தெரிவித்தார். இந்நிலையில் விஜயவாடா கிருஷ்ணா நதியில் இருந்து புறப்பட்ட நீர்வழி விமானம் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த விமானம் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை அடைந்தது. பின்னர் விஜயவாடாவிற்கு அதிகாரிகள் பயணம் செய்து சோதனை மேற்கொண்டனர்.

The post ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் – ஸ்ரீசைலம் அணை வரை இன்று முதல் நீர்வழி விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Prakasam — ,Srisilam Dam ,Thirumalai ,Chief Minister ,Chandrababu Naidu ,Prakasam Dam ,AP state government ,Prakasam ,Krishna River ,Vijayawada ,Andhra ,
× RELATED இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி...