×
Saravana Stores

கிங், கேர்ட்டி அதிரடி சதம்; இங்கிலாந்தை அலறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3வது ஓவரில் ஜேக்ஸ், 4வது ஓவரில் காக்ஸ், 6வது ஓவரில் பெத்தேல் டக் அவுட்டாக இங்கிலாந்து அணி 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் லிவிங்ஸ்டன் இந்த முறை வெறும் 6 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் தடம் புரண்டது. அதன் பிறகு சால்ட் மற்றும் சாம் கரன் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். சாம் கரன் 40 ரன்களில் அவுட்டாக பின்னர் களமிறங்கிய டேன் மவுஸ்லி 57 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு உதவினார். சிறப்பாக ஆடி வந்த பில் சால்ட் 74 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது. 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங் மற்றும் லீவிஸ் பேட்டிங்கை தொடங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லீவிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேர்ட்டி இங்கிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். கிங்கும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட இருவரையும் அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர்.

2வது இன்னிங்ஸில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதால் கிங் தனது 3வது சதத்தையும், கேர்ட்டி தனது முதல் சதத்தையும் அடித்து அசத்தினர். கிங் 117 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேர்ட்டி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 114 பந்துகளில் 2 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 128 ரன்களை விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

The post கிங், கேர்ட்டி அதிரடி சதம்; இங்கிலாந்தை அலறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : King, Garty ,West Indies ,England ,Barbados ,King ,Garty ,Dinakaran ,
× RELATED கேப்டனுடன் சண்டை போட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு 2 போட்டிகளில் தடை