×
Saravana Stores

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வடகொரியா ஏவுகணை சோதனை

சியோல்: தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தி வருகின்றது. சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டையும் மீறி வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தொடர்ந்து வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை அல்லது எத்தனை என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அமெரிக்க நிலப்பரப்பை அடையும் வகையில் வடகொரியாவில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் விமான சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

The post அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வடகொரியா ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Tags : US presidential election ,SEOUL ,North Korea ,South Korea ,Japan ,United States ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவு...