×

விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2023 ஜூன் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். அவர் சென்ற போயிங்கின் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட சிக்கல்களால் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ்சின் க்ரூ டிராகனில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் தினமும் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களை பார்த்து வருகிறார். அவர் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறார். இதனால் அவர் தினமும் 16 சூரிய உதயங்களையும், சூரிய அஸ்தமனங்களையும் காணும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றுள்ளார். சர்வதேச விண்வெளி மையமானது மணிக்கு சுமார் 28,000 கிமீ வேகத்தில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதாவது விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒரு சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்கள்.

இதனால் விண்வெளி வீரர்கள் ஒரு பூமி நாளில்(24 மணி நேரத்தில்) 16 பகல்-இரவு சுழற்சிகளை சந்திக்கின்றனர். ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை பகல், இரவு வந்து செல்கிறது. இதனால் அவர்கள் 16 முறை சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை அவர்கள் பார்க்கிறார்கள். இதனால் விண்வெளி வீரர்கள் ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் அடிப்படையில் ஒரு அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள். அங்கு அவர்களின் நாட்கள் அனைத்தும், அதாவது அவர்கள் செய்யும் வேலை, உடற்பயிற்சி, உணவு, ஓய்வு என தனி அட்டவணை பின்பற்றப்படுகிறது. பூமியில் சூரிய உதயம், அஸ்தமன நேரத்தை வைத்து விழிப்பு, தூக்கம் நேரம் மாறுகிறது. ஆனால் விண்வெளியில், இந்த இயற்கையான குறிப்புகள் இல்லை. ஏனெனில் சூரியன் ஒரே மாதிரியாக உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. இதனால் விண்வெளி வீரர்கள் சமநிலையான வாழ்க்கை முறையை பராமரிக்க ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் அடிப்படையைப் பின்பற்றுகிறார்கள்.

 

The post விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ் appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,New York ,NASA ,Sunitha Williams ,International Space Station ,Earth ,Boeing ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை