மவ்மெரி: இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் வீடுகள் தீப்பிடித்து 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் உள்ள லெவொடொபி லக்கி லக்கி எரிமலை நேற்று முன்தினம் இரவு திடிரென வெடித்து சிதறியது. அடுத்தடுத்து எரிமலை வெடித்ததால் சுமார் 2000 மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்புக்கள் மேலெழுந்தன. இவை அருகில் உள்ள கிராமங்களில் விழுந்ததில் சில வீடுகள் மற்றும் அருகில் இருந்த கட்டிடங்களில் தீப்பிடித்தன. மேலும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை பரவியுள்ளது.
நள்ளிரவில் வீடுகள் தீப்பற்றியதால் அதில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினார்கள். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். எரிமலை கண்காணிப்பு நிறுவனமானது எச்சரிக்கை நிலையை அதிகரித்துள்ளது. அடிக்கடி எரிமலை வெடித்து சிதறுவதால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் அருகில் உள்ள 6 கிராமங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை: 6 பேர் பலி appeared first on Dinakaran.