×

பாடாலூரில் பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது எதிரே சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்னை அடுத்த காரன் ஓடையை சேர்ந்த சரவணன் (55) ஓட்டி வந்த கார்.

பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த பாடாலூர் போலீசார் மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூரில் பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Badalur ,Padalur ,Perambalur District ,Manishangu ,Manikandan ,Erayur ,Trichy ,Chennai National Highway ,Padalur Private Wedding Hall ,
× RELATED விஜயகோபாலபுரத்தில் புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது