×
Saravana Stores

ஆண்கள்-5,00,22,739, பெண்கள்-4,69,96,279 மகாராஷ்டிராவில் 9.7 கோடி வாக்காளர்கள்: புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

மும்பை: மகாராஷ்டிராவில் புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9,70,25,119. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5,00,22,739. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,69,96,279. மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,101 ஆகும். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறும். 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த தேதியின் படி மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9.60 கோடி ஆகும். ஆனால் நேற்று முன்தினம் 30 தேதிப்படி புதுப்பிக்க வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9.70 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர்களில் 22.22 லட்சம் பேர் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள். இவர்கள் முதல் தடவையாக வாக்களிக்க இருப்பவர்கள். முன்பு ஜனவரி மாதம் 1ம் தேதி 18 வயதை அடைந்தவர்கள் மட்டும் வாக்காளர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். ஆனால் இப்போது ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு பின்னர் 18 வயதை எட்டியவர்களும் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு ஆண்டுக்கு நான்கு முறை தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். இதனால் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூடுதல் தேர்தல் கமிஷனர் டாக்டர் கிரன் குல்கர்னி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 30-39 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள். இந்த வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,18,15,278. இதுபோல், 85-120 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12,40,919. 120க்கும் அதிகமான வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 110 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 56. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 54 ஆகும்.இவ்வாறு தேர்தல் கமிஷன் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆண்கள்-5,00,22,739, பெண்கள்-4,69,96,279 மகாராஷ்டிராவில் 9.7 கோடி வாக்காளர்கள்: புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Election Commission ,Mumbai ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை...