புதுடெல்லி: கடந்த செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். இவ்வாறு இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்துவது, சீனாவை சார்ந்திருப்பதை ஆப்பிள் குறைப்பதில் தீவிரமாக இறங்கியிருப்பதை காட்டுகிறது.
இதில், தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகப்படியான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் 3 சப்ளையர்களான தைவானின் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை தென் இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்கின்றன. இவற்றில், சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, இந்தியாவின் முதன்மை சப்ளையர். இந்த தொழிற்சாலை தான், ஐபோன் ஏற்றுமதியில் பாதிப் பங்கைக் கொண்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள டாடா குழுமத்தின் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் இருந்து ரூ.14,294 கோடி ஐபோன்கள் ஏற்றுமதி செய்துள்ளன. ஆப்பிளின் இந்திய ஏற்றுமதி கடந்த நிதியாண்டை விட (ரூ.84 ஆயிரம் கோடி) இம்முறை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சீனாவுக்கு டாட்டா காட்டும் ஆப்பிள் ரூ. 50 ஆயிரம் கோடி ஐபோன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி: தமிழ்நாட்டிலேயே அதிக தயாரிப்பு appeared first on Dinakaran.