×
Saravana Stores

ஊட்டியில் தொடர் மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின

Ooty, Marigold flowers, ootyஊட்டி : ஊட்டியில் தொடர் மழையால் தாவரவியல் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டிருந்த மேரிகோல்டு மலர்கள் அழுகியுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.

இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்படுகிறது. மேலும், மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதேபோல், ரோஜா பூங்ாவில், ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால், இவ்விரு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர பெரிய அளவிலான விழாக்கள், கண்காட்சி போன்றவை நடத்தப்படுவதில்லை. எனினும், தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இம்முறையும் இரண்டாம் சீசனை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

15 ஆயிரம் தொட்டிகளில் மாடங்களிலும், 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பெர்னஸ் புல் மைதானத்திலும் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், பூங்கா மைதானங்களில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மலர் தொட்டிகளில் உள்ள மலர்கள் அழுகின. குறிப்பாக, டேலியா, மேரிகோல்டு மற்றும் சில மலர் செடிகள் அழுகியது.

இதனால், இந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. இது மட்டும் இன்றி பூங்கா முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த மேரி கோல்டு மலர்கள் மழையின் காரணமாக அழுகி உள்ளன. குறிப்பாக, நுழைவாயில் பகுதியில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களில் உள்ள மேரி கோல்டு மலர்கள் அழுகி காணப்படுவதால் அந்த மலர் அலங்காரம் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

The post ஊட்டியில் தொடர் மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED மஞ்சூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள்