- தலைவாசல்
- ஆத்தூர்
- சதாசிவபுரம்
- Chelliyamman
- Ponniyamman
- பொன்னையம்மன்
- சதாசிவபுரம்
- தலைவாசல், சேலம் மாவட்டம்
ஆத்தூர், அக்.29: தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தில், செல்லியம்மன் பொன்னியம்மன் கோயில் பூட்டை உடைத்து தங்க நகை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் பொன்னியம்மன், செல்லியம்மன் கருப்பணார் வகையறா கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல், பூஜை செய்ய பொதுமக்கள் வந்தனர். அப்போது ேகாயிலின் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆத்தூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ேகாயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தலைவாசல் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.