×

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை

 

பல்லடம், அக்.29: பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பலரும் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் ஏராளமான வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்டோர், பால், டீ, பிஸ்கட், ரொட்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதற்காக கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து புறநோயாளிகள், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகன போக்குவரத்து, விபத்து அபாயத்துக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது சிரமம் ஆக உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க ஆவின் நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavin Palagam ,Palladam Government Hospital ,Palladam ,
× RELATED திருப்பூரில் காவலர்களின் காலில் விழுந்து வணங்கிய பெண்